புத்தரை பற்றிய சத்குருவின் பொன்மொழிகள் (Buddha quotes in Tamil)

மனித விழிப்புணர்வு என்னும் முழு நிலவு மீண்டும் மீண்டும் உதிக்கட்டும். கௌதம புத்தர் தன்னுடைய முழுமை நிலையை இன்றுதான் அடைந்தார். முழுமையை அடைய விரும்பும் உங்கள் அனைவருக்கும் இந்நாள் அதற்கான ஊக்கத்தையும் சாத்தியத்தையும் வழங்கட்டும்.


தெய்வீகத்தின் பேரானந்தத்தை நீங்கள் உணர்வீர்களாக.

அன்பும் அருளும்,
சத்குரு


Buddha Quotes in Tamil, புத்தரை பற்றிய சத்குருவின் பொன்மொழிகள்

மனித விழிப்புணர்வை உயர்த்திடும் பணியில் கௌதம புத்தரின் பங்கு, தனித்துவம் வாய்ந்ததும் அளப்பரியதும் ஆகும். இந்த பௌர்ணமி தினத்தில் நீங்கள் முழுமையை உணர்வீர்களாக!

Buddha Quotes in Tamil, புத்தரை பற்றிய சத்குருவின் பொன்மொழிகள்

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நீங்கள் யாராக இருப்பினும் சரி, அது புத்தர் அல்லது இயேசு அல்லது நீங்கள் யாராக இருந்தாலும் சரி, ஒரு மனிதருக்கு உண்டான சாத்தியத்தில் எந்த வேறுபாடும் இல்லை.

Buddha Quotes in Tamil, புத்தரை பற்றிய சத்குருவின் பொன்மொழிகள்

இந்த நாளில்தான், கௌதம புத்தர் ஞானமடைந்தார். ஞானமடைய வேண்டும் என்கிற தீவிர நோக்கத்தோடு இருந்தால், நீங்களும் அதை ஒரே கணத்தில் அடைந்து விட முடியும் என்பதை இந்த நாள் நினைவூட்டட்டும்.

Buddha Quotes in Tamil, புத்தரை பற்றிய சத்குருவின் பொன்மொழிகள்

இன்னும் கொஞ்சம் இந்துக்களோ, கிறிஸ்தவர்களோ அல்லது இஸ்லாமியர்களோ நமக்கு தேவையில்லை. நமது தேவையெல்லாம் இன்னும் கொஞ்சம் புத்தர்கள், இன்னும் கொஞ்சம் இயேசுக்கள், இன்னும் கொஞ்சம் கிருஷ்ணர்கள் தான். இவர்கள் உருவாகும்போது உண்மையான மாற்றம் நிகழும். ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் உள்நிலையில் இந்த சாத்தியம் உள்ளது.

Buddha Quotes in Tamil, புத்தரை பற்றிய சத்குருவின் பொன்மொழிகள்

புத்தர், இயேசு, கிருஷ்ணர் எல்லோரும் உங்களை உங்கள் எல்லைகளுக்கு அப்பாற்பட்டு வளர்க்கும் முறையைத்தான் போதித்தார்கள். இதன் மூலம் ஆன்மீக விடுதலையை அடைய முடியும்.

Buddha Quotes in Tamil, புத்தரை பற்றிய சத்குருவின் பொன்மொழிகள்

நீங்கள் கிருஷ்ணர், ராமர், புத்தர் எல்லோரையும் புகழ்ந்தேத்தினால் உங்களுக்கு ஒன்றும் நடக்கப்போவதில்லை. மாறாக நீங்களும் அவர்களைப் போல் உண்மையை உணர வாய்ப்புண்டு. இது சாத்தியமே.

Buddha Quotes in Tamil, புத்தரை பற்றிய சத்குருவின் பொன்மொழிகள்

தொடர்புடைய பதிவுகள்:

சத்குருவிடமிருந்து சுவாரஸ்யமான 11 புத்தர் கதைகள்

கடந்த பல ஆண்டுகளில் சத்குரு கூறிய புத்தர் கதைகளின் தொகுப்பு இங்கே இடம் பெறுகிறது. இந்தக் கதைகள் நமக்கு ஆன்மீகப் பாதையின் குறிப்பிட்ட அம்சங்களைத் தெளிவுபடுத்துவதாகவும், கௌதமரின் வாழ்க்கை மற்றும் அவரது பயணங்கள் நமக்கு உத்வேகம் அளிப்பதாகவும் இருக்கின்றன.

நீங்கள் சரியா? புத்தர் சரியா?

"ஆசையே துன்பத்திற்கு காரணம்" என்று புத்தர் சொல்லியிருக்க நீங்களோ, "அத்தனைக்கும் ஆசைப்படு" என்று சொல்கிறீர்களே. ஏன் இந்த முரண்பாடு? என்று பிரபல திரைப்பட இயக்குநரான திரு. SA.சந்திரசேகர் அவர்கள் கேட்க, அதன் ரகசியத்தை இந்த வீடியோவில் கட்டவிழ்க்கிறார் சத்குரு...

வேந்தன் புத்தனான கதை!

இது... புத்தனாக மாறிய வேந்தனின் வாழ்க்கைக் கதை... போதி மரத்து புத்தனின் ஞானப் பெருங்கதை... நாடி வந்த சீடர்களுக்கு ஞானம் கொடுத்த மகானின் கதை... இன்றும் நம்முள் வாழும் ஆத்மனின் அரிய கதை... அறியுங்கள்...